தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எல்லா சின்னத்திலேயும் ஒரு குத்து - வாக்காளனின் அதீத ஜனநாயகக் கடமை! - Registered votes

விழுப்புரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாக்குச்சீட்டிலுள்ள அனைத்துச் சின்னங்களிலும் வாக்களித்து தனது அதீத ஜனநாயகக் கடமையை ஆற்றியிருக்கும் ருசிகர சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.

அனைத்துச் சின்னங்களிக்கும் ஓட்டு
அனைத்துச் சின்னங்களிக்கும் ஓட்டு

By

Published : Oct 13, 2021, 8:11 AM IST

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியத்திற்குள்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் 16ஆவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்குச் சீட்டுகளை தேர்தல் அலுவலர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாக்காளர் வாக்குச்சீட்டில் இருந்த அனைத்துச் சின்னங்களிலும் வாக்களித்த வாக்குச்சீட்டு கண்டறியப்பட்டது. ‘ஒங்கிட்ட வாங்குன காசுக்கு ஒனக்கு ஒரு குத்து, அவன்கிட்ட வாங்குன காசுக்கு அவனுக்கு ஒரு குத்து’ என வடிவேல் பட நகைச்சுவையில் வருவது போன்ற சம்பவம் நடந்துள்ளது.

அனைத்துச் சின்னங்களிக்கும் ஓட்டு

இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. இது நகைச்சுவைப் பதிவாக இருந்தாலும் இன்னும் பலருக்கு வாக்களிப்பதற்குப் போதிய விழிப்புணர்வு இல்லை என்கின்ற அவலத்தையே காட்டுகின்றது.

இதையும் படிங்க:'பாஜக நிர்வாகிக்கு ஒரே ஒரு ஓட்டு' - நெட்டிசன்கள் கிண்டல்!

ABOUT THE AUTHOR

...view details