தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுங்கள் : புரட்சி பாரதம் கட்சியினர் மனு

விழுப்புரம் : அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், டி. ஆர். பாலு, திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி, புரட்சி பாரதம் கட்சியினர் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

திமுக எம்.பி.க்கள் மீது புரட்சி பாரதம் கட்சியினர் புகார் மனு
திமுக எம்.பி.க்கள் மீது புரட்சி பாரதம் கட்சியினர் புகார் மனு

By

Published : May 25, 2020, 7:24 PM IST

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் இணைந்து கரோனா உதவிகள் தொடர்பான பொது மக்களின் கோரிக்கை மனுக்களுடன் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை மே 13ஆம் தேதி நேரில் சந்தித்தனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் சண்முகம், நாடாளுமன்ற உறுப்பினர்களான தங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தியதாகத் தெரிவித்து, ”நாங்கள் என்ன பட்டியலினத்தவர்களா?" என்று பேசியிருந்தார்.

தயாநிதி மாறனின் இந்தப் பேச்சு கடும் சர்ச்சைக்குள்ளானது. இதேபோல், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி, சென்னை, அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, "பட்டியலின சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை" எனப் பேசியிருந்தார். இந்த பேச்சும் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு சாதி வன்மத்தோடு, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசிய தயாநிதி மாறன், டி.ஆர். பாலு, ஆர்.எஸ். பாரதி ஆகியோர் மீது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்பு சட்ட விதிகளின்படி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, புரட்சி பாரதம் கட்சியினர் இன்று மனு அளித்தனர்.

விழுப்புரம் மத்திய மாவட்ட இணை செயலாளர் ஜி.பி.எஸ். செல்வராஜ் தலைமையிலான நிர்வாகிகள் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று இந்த மனுவை அளித்தனர்.

இதையும் படிங்க :வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி தயாநிதி மாறன், டி.ஆர். பாலு மனு!

ABOUT THE AUTHOR

...view details