விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ளது கல்வராயன் மலை. இந்தக் கல்வராயன் மலையில் உள்ள வெள்ளி மலை பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்காக சிறுவர் பூங்கா, படகுத் துறை ஆகியவை ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
பாழடைந்த பூங்காவால் முகம் சுளிக்கும் சுற்றுலாப் பயணிகள்! - Villupuram
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே வெள்ளிமலை பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா பாதுகாப்பின்றி பாழடைந்து இருப்பதால், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக சிறுவர் பூங்காவில் காவலர்கள், பாதுகாப்பு ஆட்கள், பூங்கா பராமரிப்பு ஆட்கள் என யாரும் வேலைக்கு செல்வதில்லை. இதனால் அங்கு சில சமூக விரோதிகள் மது அருந்தியும், பாட்டில்களை உடைத்தும் சமூக சீர்கேடுகளை செய்துவருகின்றனர்.
இதனால் கல்வராயன்மலைக்கு சுற்றுலாவுக்கு சேலம், புதுச்சேரி, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்துவரும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைகின்றனர். எனவே ஊட்டி, ஏற்காடு மலர் பூங்காக்கள் போல கல்வராயன் மலையிலும் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.