நாட்டில் மாட்டிறைச்சி என்ற பெயரில் பட்டியலின, சிறுபான்மையினர் மீது தொடர்ந்து வன்முறை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், திரைத் துறையினர் என பல்வேறு துறைகளைச் சார்ந்த சமூக அக்கறை உடைய 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியதற்காக அவர்கள் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசின் இந்தச் செயலுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள், பொதுமக்கள் என ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.
அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 49 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்தும், அவர்கள் மீது பதிவு செய்த தேச துரோக வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் நகர செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் இதில் மாநில செயலாளர் பால சந்திரபோஸ், மாவட்ட தலைவர் பழனி, மாவட்ட செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ரஃபேல் பயணம் சூப்பர் - ராஜ்நாத் சிங்