இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் விழுப்புரத்தில் நேற்று இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூத்தத் தலைவருமான பொன்முடி, விழுப்புரம் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
'இந்தியாவை ஒரே மொழி, ஒரே மதம் உள்ள நாடாக மாற்ற பாஜக சதி' - bjp
விழுப்புரம்: இந்தியாவை ஒரே மொழி, ஒரே மதம் உள்ள நாடாக மாற்ற பாஜக சதி வேலைகளை செய்துவருகிறது என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.
ponmudi
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொன்முடி, பல்வேறு மதங்கள் மொழிகள் உள்ள நாடு இந்தியா. இதனை ஒரே மொழி, ஒரே மதம் உள்ள நாடாக மாற்ற பாஜக சதி வேலைகளை செய்துவருகிறது என்றார்.
மேலும் அவர், கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டுவருகின்றன. அனைத்து தரப்பு மக்களும் சாதி மத வேறுபாடுகளைக் களைந்து சகோதரத்துவத்துடன் இருப்பதை நிரூபிப்பதற்கே இந்த இஃப்தார்நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என பேசினார்.