தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியில் சாராய ஊறல்: குற்றவாளிக்கு போலீஸ் வலை! - விழுப்புரம் எரிசாராயம் காய்ச்சிய நபர்

விழுப்புரம்: வீரபாண்டி அருகே பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி மறைத்து வைக்கப்பட்டு, சாராய ஊறல் அமைத்த நபரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Alcohol spill in Syntex tank: Police web for culprit!
சின்டெக்ஸ் டேங்கில் சாராயம் காய்ச்சிய நபர்

By

Published : Aug 17, 2020, 2:07 PM IST

விழுப்புரம் மாவட்டம், வீரபாண்டி பகுதியில் சாராய ஊறல்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளர் ரேணுகாதேவிக்கு ரகசியத் தகவல் கிடைத்து.

அதனடிப்படையில் இன்று(ஆகஸ்ட் 17) மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வீரபாண்டி அருகேயுள்ள ஆதிச்சனூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள ஒரு புதரில் 500 லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அதனை சோதனை செய்த காவல் துறையினர், அதில் 500 லிட்டர் எரிசாராயம் இருந்ததைக் கண்டறிந்தனர். இதையடுத்து அவற்றை உடனடியாக தரையில் கொட்டி அழித்தனர்.

மேலும், இந்த ஊறல் அமைத்த திருவண்ணாமலை மாவட்டம், அண்டம்பாலாம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரைத் தேடிவருகின்றனர்.

காவல் துறையினர், கைப்பற்றப்பட்ட சாராய ஊறலின் மதிப்பு 25 ஆயிரம் ரூபாய் இருக்கும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details