விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகேயுள்ள ஆலங்குப்பம் முந்திரிக்காட்டில் நள்ளிரவில் மது விருந்துடன் கூடிய நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக இணையதளம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி, சென்னையிலிருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் இளைஞர்கள், இளம் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
மின் விளக்கு அலங்காரம், ஆடல்-பாடல் என இளைஞர்களும், இளம்பெண்களும் போதையில் நடனமாடிக் கொண்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் உடன் அந்தப் பகுதிக்குச் சென்று அவர்களை சுற்றி வளைத்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தி, கடுமையான எச்சரிக்கைக்குப் பின் அனைவரையும் விடுவித்தனர். மேலும், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த சென்னையைச் சேர்ந்த யுவராஜ், மின் அலங்காரம் செய்தவர்கள், நிகழ்ச்சிக்கு இடம் வழங்கியவர்கள் என 15 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
முந்திரித் தோப்பில் நள்ளிரவில் போதை நடனம்: 15 பேர் கைது - போதை நடனம்
விழுப்புரம்: ஆரோவில் அருகேயுள்ள முந்திரித் தோப்பில் நள்ளிரவில் சட்டவிரோதமாக மது விருந்தில் ஈடுபட்ட 15 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
villupuram
இவர்களிடம் இருந்து புதுச்சேரி மதுபாட்டில்கள், 150 கிராம் கஞ்சா, மின்சாதனப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
Last Updated : Jun 10, 2019, 9:22 AM IST