கிருஷ்ணாபுரம் பகுதியிலுள்ள மூன்று அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதனால், குடியிருப்பு பகுதி மக்களின் மீது கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி அப்பகுதிமக்கள் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், அப்புகார் மீது காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளததாக கூறப்படுகிறது.