தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாட்டரி விற்பனை: காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை! - காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

விழுப்புரம்: ஆன்-லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!
காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

By

Published : Dec 14, 2019, 7:46 AM IST

விழுப்புரம் முத்தோப்புப் பகுதியில் வசித்து வந்தவர் அருண் (33). நகைக்கடைத் தொழிலாளியான இவருக்கு சிவகாமி (27) என்ற மனைவியும், பிரியதர்ஷினி (4), பாரதி (3), யுவஸ்ரீ (1) ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர்.

இந்நிலையில் அருணுக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. தொடர்ந்து தனது வருமானம் முழுவதையும் அவர் லாட்டரி சீட்டுகளை வாங்கி செலவழித்து வந்துள்ளார். இதனால் தொழில் நலிவடைந்து போதிய வருமானம் இல்லாமல் கடந்த சில தினங்களாக வறுமையில் இருந்துள்ளார். மேலும் கடன்சுமையிலும் சிக்கி தவித்து வந்துள்ளார்.

இதில் கடந்த சில தினங்களாக கடுமையான மன உளைச்சலில் இருந்த அருண், நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் தனது மனைவி, மகள்களுக்கு சயனைடு கலந்த விஷம் கொடுத்து, தானும் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் விழுப்புரத்தில் சட்டத்துக்குப் புறம்பாக ஆன்-லைன் முறையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த 14 பேரை காவல்துறையினர் கைதுசெய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், "ஆன்-லைன் லாட்டரி தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆன்-லைன் லாட்டரிக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் ஆன்-லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.

இதையும் படிங்க...அதிரடி காட்டும் ஜெகன் அரசு: ஆந்திராவில் திஷா சட்டம் நிறைவேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details