விழுப்புரம்: திண்டிவனம் பைபாஸ் சாலை, அருகே நத்தைமேடு என்ற இடத்தில் விழுப்புரதில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து ஒன்று பழுதாகி சாலை ஓரமாக நின்றது.
அப்போது அதன் பின்னால் வந்த அரசு விரைவு பேருந்தும் அதற்கு பின்னால் வந்த மற்றொரு ஆம்னி பேருந்தும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் வந்த 2 பயணிகள் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் காவல்துறையினர், காயமடைந்த பொள்ளாச்சியை சேர்ந்த கேமாவதி (30), சென்னையை சேர்ந்த ரேவதி (23) ஆகியோரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனை அடுத்து சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:கழண்டு விழுந்த கவர்மெண்ட் பஸ் சீட்... ரோட்டில் விழுந்து பயணி காயம்...