விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த பெரம்பை வாழபட்டாம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் பிரகாஷ் (24). இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது புதுச்சேரியைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல், பிரகாஷை வீட்டிலிருந்து வெளியே வரச் சொல்லி அழைத்துள்ளனர். ஆனால், பிரகாஷ் வெளியே வர மறுத்துள்ளார்.
தொடர்ந்து, அந்தக் கும்பல் இருசக்கர வாகனத்தில் பிரகாஷை கடத்திச் சென்று, புதுச்சேரி அருகே உள்ள கூடப்பாக்கம் பகுதியில் அரிவாளால் தலை, கைகளில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பிரகாஷை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.