தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொன்முடிக்கு வைக்கப்பட்ட தொலைபேசி கோரிக்கை: வீடு தேடி சென்று உதவிய திமுகவினர் - அத்தியாவசிய பொருட்கள்

விழுப்புரம்: தொலைபேசி மூலம் உதவி கேட்ட தனது தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், திருக்கோவிலூர் சட்டப்பேரவை உறுப்பினருமான க.பொன்முடி உதவிகளை செய்தார்.

MLA Ponmudi who helped the differently abled person
MLA Ponmudi who helped the differently abled person

By

Published : Sep 12, 2020, 9:39 PM IST

கரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட தண்டரை கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அம்புருஸ் அன்புராஜூக்கு இன்று (செப்.12) திருக்கோவிலூர் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான க.பொன்முடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனக்கு உதவிடுமாறு கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து திமுக துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, மணம்பூண்டி ஒன்றியச் செயலாளர் பிரபுவின் மூலம் அந்த மாற்றுதிறனாளிக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details