விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள காணையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற அவர் பேசுகையில், " மூன்று மாத காலத்தில் திமுக ஆட்சி வந்ததும் மக்களின் குறைகள், கவலைகள் தீர்க்கப்படும் என்று நான் கூறியதை அறிந்து முதலமைச்சர் பழனிசாமி செல்ஃபோனிலேயே குறைகளை சொல்லலாம் எனவும் அவை தீர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் கட்டிய தடுப்பணை ஒரே மாதத்தில் உடைந்தது. ஆனால், அணையை, தான் திறக்கவில்லை என அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவிக்கிறார். ஆனால், அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தரமற்ற அணையைக் கட்டிய ஒப்பந்ததாரரை கைது செய்யாதது ஏன்? சி.வி. சண்முகம் மரியாதையாகப் பேச கற்றுக்கொள்ளவேண்டும். எந்தப் பணியும் இந்த ஆட்சியில் மேற்கொள்ளப்படவில்லை.