தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் விழுப்புரம் மாவட்ட திருநங்கைகள் நல சங்கத்தினர் இணைந்து விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
ஏப்ரல் 15-ல் 'மிஸ் கூவாகம்' நிகழ்ச்சி - திருநங்கைகள் அறிவிப்பு - transgender
விழுப்புரம்: இந்த ஆண்டிற்கான 'மிஸ் கூவாகம்' நிகழ்ச்சி ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெறும் என திருநங்கைகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
Miss koovagam
அப்போது அவர்கள் கூறியதாவது:
- ஏப்ரல் 15ஆம் தேதி விழுப்புரத்தில் 'மிஸ் கூவாகம்' போட்டி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 16ஆம் தேதி திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்வு நடைபெறும்.
- இந்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி 'மிஸ் கூவாகம்' நிகழ்வும், 'தேசிய திருநங்கைகள்' தினமும் ஒன்றாக வருவதால் எங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக அமைந்துள்ளது.
- இந்த ஆண்டு எங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் சாலை, குடிநீர், குளியலறை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துத்தர வேண்டும்.
- மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் விதிமுறைகளை தளர்த்த வேண்டும்.
- விடுதி கட்டணம் மூன்று மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது. அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சினிமா நட்சத்திரங்கள் மற்றும் லயன்ஸ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
- திருநங்கைகள் நலன் கருதி கூவாகம் கிராமத்தை மீண்டும் விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அவர்கள் பேசினர்.