தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர் சி.வி. சண்முகம்! - TN Govt
விழுப்புரம்: திண்டிவனத்தில் சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசினை வழங்கினார்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுவருகின்றது. இதேபோன்று இன்று (ஜன. 02) திண்டிவனத்தில் உள்ள திருவள்ளுவர் நகர் நியாயவிலைக் கடையில் 2500 ரூபாயுடன் கூடிய பொங்கல் தொகுப்பான பச்சரசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய தொகுப்பை சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் வழங்கினார்.
இதனைப் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். இதில் சார் ஆட்சியர், மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.