தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துவருகின்றனர். தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்துக் கட்சியினரும் பரப்புரையைத் தொடங்கியுள்ளதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
விழுப்புரம் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.
இந்நிலையில், வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து, விழுப்புரம் மாவட்ட கழகச் செயலாளரும், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் இன்று விழுப்புரம் நகர் பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது,அதிமுக கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் சார்பில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவு