தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சகோதரத்துவ, சமத்துவ உணர்வினை ஊட்ட வேண்டியது ஆசிரியர்களின் கடமை - அமைச்சர் பொன்முடி - தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்

மாணவர்களிடையே சகோதரத்துவ, சமத்துவ உணர்வினை ஊட்ட வேண்டியது ஆசிரியர்களின் கடமை என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தினார்.

Etv Bharatஆசிரியர்கள் மாணவர்களிடையே சாதி பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும் -  அமைச்சர் பொன்முடி
Etv Bharatஆசிரியர்கள் மாணவர்களிடையே சாதி பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும் - அமைச்சர் பொன்முடி

By

Published : Jan 8, 2023, 9:51 AM IST

அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டம்கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற 'நிகரி விருது' வழங்கும் விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த 7 ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு “நிகரி விருது” வழங்கப்பட்டது.

சாதி ரீதியான செயல்பாடு:இந்த விழா மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, ‘இந்தியாவிலேயே அரசியலுக்கு அப்பாற்பட்டு திராவிட மாடல் ஆட்சியை நாங்கள் நடத்துவோம் என்று துணிச்சலாக இருக்கும் ஒரே முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் மட்டுமே. "எந்த கட்சியாக இருந்தாலும் சாதி ஒழிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அடித்தளத்தில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் வளரவும், சம உரிமை பெறவும், அடித்தட்டு மக்களை ஒருங்கிணைப்பதற்காக அம்பேத்கர் மற்றும் பெரியாரோட இயக்கங்கள் உருவாக்கப்பட்டன.

சாதி என்பது வெறியூட்டுவதற்காகவும், வன்முறைக்காகவும் இருக்கக் கூடாது. இன்று பள்ளி, கல்லூரிகளில் சாதி ரீதியாக ஆசிரியர்கள் செயல்படுவதாக புகார்கள் அதிகளவில் வருகிறது. திராவிட இயக்கம் 50 ஆண்டு காலமாக உள்ளதால் தான் இன்று அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இளமையிலேயே சகோதரத்துவம் மற்றும் சமத்துவ உணர்வினை ஊட்ட வேண்டியது இன்றைய ஆசிரியர்களின் கடமை.

பலர் இன்று வரை சாதிய உணர்வுகளை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வளர்க்கின்றார்கள். பள்ளி, கல்லூரிகளில் அதிகளவு சாதி ரீதியான புகார்கள் அதிகத்துள்ளன. அதனை மழுங்கடித்து அனைவரும் மனிதர்கள் என்ற மனப்பான்மை இருக்க வேண்டும். சமத்துவ ரீதியாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:Nurses Strike: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!

ABOUT THE AUTHOR

...view details