விழுப்புரம்:தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயில் முக்கியமானது. இக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசி பெருவிழா 13 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான மாசி பெருவிழா நேற்று (பிப்.18) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவபெருமானின பிரம்மஹத்தி தோசத்தை நீக்கிய தலம் என்பது கோயில் வரலாறு. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மயான கொள்ளை திருவிழா இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய திருவிழாவான இன்று (பிப்.19) திருதேரோட்டம் நடைப்பெற்று வருகிறது.
ஆலயத்தில் இருந்து சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அங்காளம்மன் மயான காளியாய் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்காளம்மன் மயானத்தை நோக்கி சென்றபோது ஏராளமான பக்தர்கள கோழிகளை கடித்தவாறு அருள் வந்து ஆடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.