தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா

விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழாவையொட்டி நாளை (பிப்ரவரி 28) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் தேர் திருவிழா
கோயில் தேர் திருவிழா

By

Published : Feb 27, 2020, 10:33 PM IST

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் மாசி பெருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து மறுநாள் மயானக்கொள்ளை விழாவும், 5ஆம் நாளான நேற்று தீமிதித்தல் திருவிழாவும் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பூதம், சிம்மம், அன்னம், யானை போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் காட்சி நடைபெற்றது.

இவ்விழாவின் 7ஆம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் ஊஞ்சல் உற்சவம், தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்துக்கு நாளை ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திருவிழாவில் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாகக் கலந்துகொள்வர். இதனால், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் விழுப்புரம், புதுச்சேரி, சென்னை போன்ற பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.

இதையும் படிங்க:'21 அரிவாள் மீது நடந்த பூசாரி' - ஆன்மிகமும் அறிவியலும்

ABOUT THE AUTHOR

...view details