தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மருத்துவ, மீட்புக் குழுவினர் தயார் நிலையிலிருக்க வேண்டும்' - ஹர்மந்தர் சிங்! - ஹர்மந்தர் சிங்

விழுப்புரம்: நிவர் புயல் காரணமாக மருத்துவ, மீட்புக் குழுவினர் தயார் நிலையிலிருக்க வேண்டும் என அரசு கூடுதல் தலைமைச் செயலர் ஹர்மந்தர் சிங் கேட்டுக்கொண்டார்.

ஹர்மந்தர் சிங்
ஹர்மந்தர் சிங்

By

Published : Nov 24, 2020, 6:46 PM IST

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று(நவ.24) நடைபெற்றது. அதில், அரசு கூடுதல் தலைமைச் செயலர் ஹர்மந்தர் சிங், விழுப்புரம் மாவட்ட நிகர் புயல் கண்காணிப்பு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள சென்னை காவல்துறை ஐ.ஜி. சத்தியப்பிரியா, ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ஹர்மந்தர் சிங், "நிவர் புயலை எதிர்கொள்ள மாவட்டம் முழுவதும் அனைத்து துறை அலுவலர்களும், விழிப்புடன் இருக்க வேண்டும். எந்தெந்த பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் என்பதை முன்கூட்டியே அறிந்து அப்பகுதியிலிருக்கும் மக்களை பாதுகாக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் 122 கடலோரப் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே அப்பகுதிகளில், கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறைகள் மூலம் மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்ய வேண்டும். அதேபோல, மருத்துவக் குழு மற்றும் மீட்பு குழுவினர் எப்போதும் தயார் நிலையிலிருக்க வேண்டும்" எனக் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மாமல்லபுரத்தில் சூறைக்காற்றுடன் கொட்டும் கனமழை!

ABOUT THE AUTHOR

...view details