இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சானிடைசர், ஹேண்ட்வாஷ், முகக் கவசம் உள்ளிட்ட பொருள்களை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையை விடக் கூடுதல் விலைக்கு விற்பனைசெய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் ஆய்வுகள் மூலம், மூன்று நிறுவனங்கள் முகக்கவசம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையை விடக் கூடுதல் விலைக்கு விற்பனைசெய்வது கண்டறியப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.