விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பிரசித்திப் பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் மாசி தேர் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் தமிழ்நாடு புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
செஞ்சியில் வெகு விமரிசையாக நடைபெற்ற மாசி தேர் திருவிழா! - vilupuram latest news
விழுப்புரம்: செஞ்சி அடுத்த பிரசித்திப் பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் மாசி தேர் திருவிழா நடைபெற்றது.
விமர்சையாக நடைபெற்ற மாசி தேர் திருவிழா
அப்போது, பக்தர்கள் நாணயங்களையும், உழவர்கள் தங்கள் நிலத்தில் விளைந்த மணிலா, காய்கறிகள் உள்ளிட்ட தானியங்களை தேர் மீது தூவினர். செஞ்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், சுகாதாரத் துறையினர், மின் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: முதல் படை வீட்டில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றம்