விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பிரம்ம குண்டம் பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி சந்திரன். இவருக்கும் இவரது மனைவி ராசாத்திக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
மனைவி தலையில் அம்மி கல்லை போட்டு கொன்ற கணவர் கைது
விழுப்புரம்: குடும்பத் தகராறில் மனைவி தலையில் அம்மி கல்லை போட்டு கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று மாலை வீட்டிற்கு வந்த கணவர் சந்திரன் தனது மனைவி ராசாத்தியிடன் வழக்கம்போல வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு இறுதியில் கணவர் சந்திரன் ஆத்திரம் தாங்காமல் தனது மனைவி ராசாத்தி மீது வீட்டில் இருந்த அம்மி கல்லை தலையில் போட்டுள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த ராசாத்தி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வடபொன்பரப்பி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.மேலும், சந்திரன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.