தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டி படுகொலை - Man hacked to death due to hostility

திருவண்ணாமலையில் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Man hacked to death due to hostility in Thiruvannamalai
Man hacked to death due to hostility in Thiruvannamalai

By

Published : Dec 3, 2020, 4:44 PM IST

திருவண்ணாமலை: காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பங்க் பாபு. இவர் பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். திருவண்ணாமலை சன்னதி தெருவில் வசித்து வந்த அதிமுக நகர செயலாளர் கனகராஜ் என்பவருக்கும், பங்க் பாபுவுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணாமலையார் கோயில் திருமஞ்சன கோபுரம் அருகில் கனகராஜை பங்க் பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து வெட்டி படுகொலை செய்தனர். இதையடுத்து பங்க் பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த பங்க் பாபு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இதற்கிடையில் அவரை வேவு பார்த்து வந்து அடையாளம் தெரியாத் நபர்கள் இன்று திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் உள்ள டீ கடையில் இருந்த பங்க் பாபுவை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு வாகனத்தில் தப்பி சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

இதையும் படிங்க:முன்விரோதம் மூன்று பேர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details