தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செஞ்சியில் டிவிஎஸ் 50யில் சந்தனக்கட்டை கடத்திய நபர் கைது! - Man arrested for smuggling

செஞ்சி அருகே பனையபுரம் பகுதியில் டிவிஎஸ் 50யில் 25ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சந்தனக்கட்டைகள் கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரை வனத்துறை கைது செய்துள்ளனர்.

செஞ்சியில் டிவிஎஸ் 50யில் சந்தனக்கட்டை கடத்திய நபர் கைது
செஞ்சியில் டிவிஎஸ் 50யில் சந்தனக்கட்டை கடத்திய நபர் கைது

By

Published : May 27, 2022, 4:48 PM IST

விழுப்புரம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள அயோத்தியாபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர், கிருஷ்ணன். இவர் இன்று செஞ்சி அருகே உள்ள பனையபுரம் பகுதி வழியாக விழுப்புரத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு சோதனை மேற்கொண்டு இருந்த மதுவிலக்கு காவல் துறையினர் அந்த வழியாக வந்த கிருஷ்ணனை சோதனை செய்தபோது ஒரு பையில் கிருஷ்ணன் சந்தனக்கட்டை வைத்திருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் சந்தனக்கட்டை கடத்தலில் ஈடுபடுபவர் என அறிந்து, அவரை விழுப்புரம் வனச்சரக அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சந்தனக்கட்டைகள் ரூபாய் 25 ஆயிரம் மதிப்புடையது எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:பாஜக பிரமுகர் கொலை: 4 பேர் சேலத்தில் கைது

ABOUT THE AUTHOR

...view details