தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தியவர் கைது! - விழுப்பும் மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை

விழுப்புரம்: திண்டிவனம் அருகே புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தியவரை காவல் துறையினர் கைது செய்து மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

Smuggler of liquor
Smuggler of liquor

By

Published : Nov 30, 2019, 5:54 PM IST

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள பாஞ்சாலம் கூட்ரோட்டில் நேற்றிரவு காவல் துறையினர் வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் எவ்வித அனுமதியோ, உரிமமோ இன்றி 50 பெட்டிகளில் 180 மி.லி அளவுகொண்ட 2,400 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டதில், கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் ஐயப்பன் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: சுவற்றில் துளையிட்டு ரூ.70ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு!

ABOUT THE AUTHOR

...view details