தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெருங்கும் கோடை: முதல் ஆளாய் தண்ணீர் பந்தலை திறந்த மநீம! - Makal neethi mayam Opening water facicility

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு, உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

Makal neethi mayam Opening water facicility
Makal neethi mayam Opening water facicility

By

Published : Jan 7, 2020, 8:07 AM IST

மய்யம்.காம்

நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து அவருடைய கட்சியில் செயல்பட விரும்புபவர்கள் கட்சியில் சேர வசதியாக மய்யம்.காம் என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் ஏராளமானோர் அந்த இணையதளம் மூலமாக அக்கட்சியில் சேர்ந்தனர்.

தண்ணீர் பந்தல்

இந்நிலையில், கட்சியில் புதிதாக உறுப்பினர் சேர்க்கை நடத்த கட்சி தலைமை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து குமரி மாவட்டம் நாகர்கோவிலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும், கோடைகாலம் நெருங்குவதால் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யத்தின் குமரி மாவட்ட செயலாளர் சசி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.

மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி

இதையும் படிங்க:

உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details