கள்ளக்குறிச்சியில் நடந்து முடிந்த மக்களவைத் தொகுதிக்கென 6 சட்டப்பேரவை தொகுகளில் வாக்கு பதிவு இயந்திரங்களை எடுத்து செல்ல அந்தந்த பகுதிகளில் இருந்து மினி லாரிகள் வாடைக்கைக்கு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கென 6 சட்டப்பேரவை தொகுகளில் உள்ள மினி லாரிகள் மூலம் இயந்திரம் கொண்டு செல்லப்படட்து. இதில், நாள் ஒன்றுக்கு 2500 ரூபாய் வாடகை என கூறி 4 நாட்களுக்கு 10000 ரூபாய் வரையில் வாடை பணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்ற லாரிகளுக்கு வாடகை தராமல் இழுத்தடிப்பு - lorry owners
விழுப்புரம்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போது வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்ற லாரிகளுக்கு வாடகை தராமால் இழுத்தடிப்பதாக, மினி லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் 150 மினி லாரிகள் இப்பணியில் ஈடுபடுத்தபட்டது. ஆனால் லாரி உரிமையாளர்களுக்கு தரவேண்டிய வாடகை பணம் 10 ஆயிரம் தற்போது வரை தரவில்லை என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அலுவலர்களிடம் கேட்டால் சரியான பதில்கள் அளிப்பதில்லை எனவும் , மாவட்ட ஆட்சியரிடம் கேளுங்கள் என கூறுவதாகவும் மினி டெம்போ உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் மிகவும் சிரமத்திற்க்கு ஆளாகியுள்ளதாகவும், தங்களின் குடும்ப செலவிற்க்கு வழியில்லாமல் தவித்து வருவதாகவும் மினி டெம்போ உரிமையாளர்கள் தெரிவித்தனர்.