தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுச்சேரியில் இருந்து கடத்தி செல்லப்பட்ட 8900 மதுபாட்டில்கள் பறிமுதல் - smuggled from pondicherry

விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து மினி லாரியில் கடத்திச்செல்லப்பட்ட 8,900 மதுபாட்டில்களை அமலாக்கப் பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

8900 மதுபாட்டில்கள் பறிமுதல்
8900 மதுபாட்டில்கள் பறிமுதல்

By

Published : Mar 14, 2021, 12:06 PM IST

Updated : Mar 14, 2021, 12:24 PM IST

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த அனுமந்தை பகுதியில், கோட்டகுப்பம் மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து அதிவேகமாக வந்த மினி லாரி, நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து, அந்த வாகனத்தை காவல்துறையினர் பின்தொடர்ந்து தாழங்காடு சோதனைச்சாவடியில் மடக்கினர்.

சோதனையில், பிரட் பாக்கெட் எடுத்துச்செல்லும் ட்ரே நடுவில் அட்டைப்பெட்டிகளில் அடுக்கி வைத்து 8,900 மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துதுறையினர், சென்னை தரமணியை சேர்ந்த சத்திய நாராயணன் என்பவரை கைது செய்தனர். விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

இதையும் படிங்க: திமுகவை ஆட்சி அமைக்க விடமாட்டோம்: கு.ப.கிருஷ்ணன்

Last Updated : Mar 14, 2021, 12:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details