விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அம்பிகா. இவர் தனது கணவர் சீதாராமனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், அம்பிகா, தனசேகர் என்ற வழக்கறிஞரிடம் ரூ. 5 ஆயிரம் கொடுத்து வழக்கை நடத்தி வந்த நிலையில், வழக்கை விரைவாக நடத்தவில்லை எனக்கூறி தனசேகரிடம் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார் அம்பிகா.
நீதிமன்றத்தில் பெண்ணை தாக்கும் வழக்கறிஞர் - வைரல் வீடியோ! - attacking
விழுப்புரம்: நீதிமன்ற வளாகத்தில் வைத்து வழக்கறிஞர் ஒருவர் பெண்ணைத் தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெண்ணை தாக்கும் வழக்கறிஞர்
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே சக வழக்கறிஞர்கள் முன்னிலையில் தனசேகர் அம்பிகாவை தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.