தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’ஒற்றுமை இல்லாததே தோல்விக்கு காரணம்’ - அமைச்சர் சி. வி. சண்முகம் - minister cv sanmugam speech in vilupuram

திண்டிவனம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், "ஒற்றுமை இல்லாததே சென்ற முறை தோல்வியுற்றதற்குக் காரணம் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், ’ஒற்றுமை இல்லாததே’ சென்ற முறை தோற்றதற்கு காரணம் என அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், ’ஒற்றுமை இல்லாததே’ சென்ற முறை தோற்றதற்கு காரணம் என அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

By

Published : Mar 14, 2021, 6:55 AM IST

விழுப்புரம்: அனைத்துக் கட்சி கூட்டணி சார்பில் திண்டிவனம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அர்ஜுனனை அறிமுகப்படுத்தும் கூட்டம் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் சி. வி. சண்முகம் பேசியதாவது:

‘திண்டிவனம் சட்டப்பேரவைத் தொகுதியில் சென்ற முறை 101 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றதற்கு நிர்வாகிகளின் ஒற்றுமையின்மையே காரணம். இனி அந்தத் தவறு நடக்கக் கூடாது. கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொருவரும் தங்கள் வார்டுகளில் தங்களின் கட்சிக்கு ஓட்டுக்களை உறுதி செய்ய வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும்" என்றார்.

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அதிமுக கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமக, புரட்சி பாரதம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க :காங்கிரஸ் தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details