தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரம் கருணாநிதிக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளித்த நடிகர் கார்த்தி!

விழுப்புரம்: இயற்கை மீது கொண்ட பற்றால் தனது சம்பளத்தை செலவு செய்து மரக்கன்றுகளை நட்டும், பிறருக்குக் கொடுத்தும் உதவிய மரம் கருணாநிதிக்கு, உழவன் பவுண்டேசன் சார்பில் அதன் நிறுவனர் நடிகர் கார்த்தி ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கினார்.

Actor Karthi gave fund for karunanithi

By

Published : Apr 14, 2019, 3:16 PM IST

விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சி சங்கீதமங்கலம் என்ற கிராமத்தில் பிறந்தவர் கருணாநிதி. இயற்கையின் மீது பேரன்பு கொண்ட இவருக்கு சிறுவயதில் பசுமை போர்த்திய ஊராக இருந்த தன் ஊரெல்லாம் மாறி மரங்களே இல்லாத சூழ்நிலை இருக்கிறதே எண்ணி போகும் இடங்கள் எல்லாம் மரங்களை நட்டார்.

இதுவரை ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு உள்ளதால் இவர் பெயரோடு 'மரம்' என்ற சொல்லும் இணைந்து 'மரம் கருணாநிதி' என்றே அழைக்கப்படுகிறார். 55 வயதான மரம் கருணாநிதிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

இதுவரை இவர் மற்றவர்களுக்கு வழங்கிய மரக்கன்றுகளுக்கோ அல்லது இவரிடம் இருந்து மற்றவர்கள் வாங்கிச் சென்ற மரக்கன்றுகளுக்கோ இவர் பணம் வாங்கியதில்லை. விசேஷ நாட்களில் வேலைக்குச் செல்வது, தன்னுடைய சம்பளத்திலிருந்து மரக்கன்றுகள் வாங்குவது இப்படிதான் இவர் மரக்கன்றுகளை இலவசமாக அளித்தும், நட்டும் வருகிறார்.

நடிகர் கார்த்தி கருணாநிதிக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி

அவர் இயற்கைமீது கொண்ட பற்றால் தன்னுடைய சம்பளத்தை செலவு செய்வதால் பல நேரங்களில் பொருளாதார நெருக்கடியும் ஏற்படுகிறது. ஆனால், எந்தநிலை என்றாலும் மரக்கன்றுகள் வழங்குவதையும், நடுவதையும் இவர் கைவிடுவதேயில்லை.

இவரது சேவையை பாராட்டியும், பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் உழவன் பவுண்டேசன் சார்பில் அதன் நிறுவனர் நடிகர் கார்த்தி ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை கருணாநிதிக்கு நேரில் வழங்கி கெளரவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details