விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரின் ஜாமின் மனு மீதான விசாரனை இன்று விசாரனைக்கு வந்தது.
பள்ளி நிர்வாகம் சார்பாக விடுக்கப்பட்ட கோரிக்கையில் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். வழக்கு குறித்த விசாரணைக்கு தாங்கள் ஒத்துழைப்பு அளிப்பதாக பள்ளி நிர்வாகம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
மாணவி சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் வழக்கு விசாரணை தற்போது சிபிசி இடுவசம் உள்ளதால் மேலும் வழக்கம் விசாரணை முழுமையாக இன்னும் நிறைவு பெறவில்லை. மேலும் குற்றவாளிகள் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைப்பதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. எனவே வழக்கு முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என மாணவி சார்பாக முன்வைக்கப்பட்டது.
மேலும் மாணவி இறந்து ஒரு மாத காலம் ஆகிறது. இன்று வரை எப்படி இறந்தார் என்கிற முழுமையான தகவல் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே விசாரணையை மேலும் தீவிர படுத்த வேண்டுமென மாணவி சார்பாக வாதாடப்பட்டது. இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி சாந்தி வழக்கு விசாரணை இன்னும் நிறைவு பெறாத காரணத்தை சுட்டிக்காட்டி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:தமிழறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்