தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதவிசெய்ய மனம் இருந்தால் வறுமை தடையில்லை! - கரோனா தொற்று

விழுப்புரம்: திண்டிவனம் அருகே வறுமையில் வாடும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தன்னால் முடிந்த ஒரு சிறு தொகையை வழங்கியுள்ளார். இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

உதவி செய்ய மனம் இருந்தால் வறுமை தடையில்லை!
உதவி செய்ய மனம் இருந்தால் வறுமை தடையில்லை!

By

Published : Apr 17, 2020, 3:05 PM IST

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள கீழ்பாதி கிராமத்தில் இருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதியில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஆந்திரா மாநிலத்தில் உள்ள பழத்தோட்டங்களுக்கு காவல் பணிக்குச் சென்ற இவர்களில் சிலர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் உள்ளனர்.

இதனால், ரமேஷ் என்பவர் மட்டும் அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் தனது நான்கு குழந்தைகள், மனைவி, சில உறவினர்களுடன் வசித்துவருகிறார்.

இந்நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்து கரோனா தொற்று பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக உணர்ந்த ரமேஷ் தன்னாலான உதவியைச் செய்ய நினைத்துள்ளார். இதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.500 அனுப்பிவைத்துள்ளார்.

முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ள ரமேஷ்

இது குறித்து ரமேஷ் கூறும்போது, நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்துள்ளதை ஊர் மக்கள் சொல்ல தெரிந்துகொண்டேன் என்றும், இதற்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் அறிந்ததன் அடிப்படையில், தன்னால் இயன்ற அளவிற்கு சிறு உதவியாக குடும்பத்தின் அவசர செலவுக்காகவும், குழந்தைகளின் மருத்துவ செலவுக்காகவும் வைத்திருந்த ரூ. 500 முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.

உதவி செய்ய மனம் இருந்தால் வறுமை தடையில்லை!

மேலும் பேசிய அவர், தங்களைப் பற்றி கவலையில்லை. தாங்கள் காட்டில் கிடைக்கும் கிழங்குகள், பழங்களை உணவாக எடுத்துக்கொள்வோம். ஆனால், நகரில் வசிக்கும் மக்களின் நிலையை நினைத்தால்தான் கவலையாக உள்ளது என்று வருந்திய ரமேஷ், அனைவரும் தங்களால் ஆன உதவியைச் செய்து விரைவில் இந்தக் கரோனா நோய் தொற்றிலிருந்து நாட்டு மக்கள் விடுபட வழிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கீழ்பாதி காட்டுப்பகுதியில் தத்தளிக்கும் இவர்களுக்கு சாலை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், அரசின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என்றபோதிலும், கரோனாவால் தத்தளிக்கும் இவர்கள் நாட்டுக்காகஉதவிசெய்துள்ளனர்.

இதையும் பார்க்க: 'ரேப்பிட் சோதனைக் கருவிகள் வைரஸ் தொற்றைக் கண்டறிய பயன்படாது'

ABOUT THE AUTHOR

...view details