தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விசாரணை கைதியாக சிறையில் இருந்தவர் குண்டர் சட்டத்தில் கைது' - arrested

விழுப்புரம்: விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த இளைஞரை, குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

கலைதாசன்

By

Published : Jul 4, 2019, 10:25 AM IST

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கலை என்கிற கலைதாசன். இவர் தொடர்ந்து பொது அமைதிக்கும், பொதுச் சொத்துக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால், இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கலைதாசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்தார்.

கோரிக்கையை ஏற்ற, மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் கலை தாசனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி கடலூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த கலைதாசனை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details