விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய-மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு திமுக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
போராட்டத்தில் ஈடுபட்ட இ.கம்யூ., கட்சியினர் கைது! - arrested in protest
விழுப்பரம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
communist party protest
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இவர்களை காவல்துறையினர் கைது செய்து விடுவித்தனர்.