விழுப்புரம்: திண்டிவனம், செஞ்சி, மைலம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனிடையே அதிக வேகத்தில் சூறைக்காற்று வீசியதால், பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது.
விழுப்புரத்தில் பலத்த சூறைக்காற்று... மரம் விழுந்ததில் விபத்து...
விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவு சூறைக்காற்று வீசியதால், பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து, விபத்து ஏற்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் நள்ளிரவு முழுவதும் பலத்த சூறைக்காற்று, மரம் முறிந்து விழுந்ததில் விபத்து.
இதில் ஆஞ்சநேயர் குளம் பகுதியில் ஆட்டோ ஒன்று வந்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்த அரச மரம் முறிந்து ஆட்டோ மீது விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோ ஓட்டுனர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். மேலும் அருகில் இருந்த மின்மாற்றிகள் மீதும் மரங்கள் விழுந்ததால் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதையும் படிங்க:உலகச் சந்தைகளை உலுக்கி எடுத்த அமெரிக்க பணவீக்கம்