தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 25, 2020, 3:57 PM IST

ETV Bharat / state

”நிவர் புயலை எதிர்கொள்ளத் தயார்” - அமைச்சர் சி.வி.சண்முகம்

நிவர் புயலை எதிர்கொள்ள விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

minister cv shanmugam
'நிவர் புயலை எதிர்கொள்ள தயார்' - அமைச்சர் சி.வி.சண்முகம்

விழுப்புரம் : நிவர் புயல் எச்சரிக்கையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, துறை சார்ந்த பிற அலுவலர்கள் ஆகியோர் இன்று (நவ.25) மரக்காணம் அருகேயேள்ள முதலியார்குப்பம், பிள்ளைச்சாவடி, கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதிகளிலுள்ள பேரிடர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தனர். மேலும், பாதுகாப்பு மையத்தில் இருந்த மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

”மாவட்டத்தில் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் இடமாக 125 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன” - அமைச்சர் சி.வி.சண்முகம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், "தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரையை ஏற்று விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டத்தில் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் இடமாக 125 பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளன. இங்குள்ள மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு கடலோரப் பகுதியில் உள்ள 12 பேரிடர் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டு மக்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் 42 பேர் விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளனர். நிவர் புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மேலும், மீனவர்களின் படகுகள், மீன் வலைகளை பாதுகாப்பாக வைக்க மீன்வளத்துறை சார்பில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" என்றார்.

இதையும் படிங்க:155 கி.மீ. வேகத்தில் புயல் வீசும்! - வானிலை மையம் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details