தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வீடு இல்லாதவர்களுக்கு மூன்றரை லட்சம் ரூபாயில் வீடு!'

விழுப்புரம்: மயிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் சிவக்குமார் மயிலம் ஒன்றியத்தில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

பாமக வேட்பாளர்
வீடு இல்லாதவர்களுக்கு 3.50 லட்சத்தில் அரசாங்க வீடு: மயிலத்தில் பாமக வேடப்பளர் சிவகுமார் பரப்புரை

By

Published : Apr 1, 2021, 9:48 AM IST

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட முப்புளி, கோபாலபுரம், பெரப்பந்தாங்கல், காட்ராம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் சிவக்குமார், திறந்த வாகனத்தில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளருக்கு கிராம மக்கள் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர்.

வீடு இல்லாதவர்களுக்கு 3.50 லட்சத்தில் அரசாங்க வீடு

அப்போது காட்ராம் பாக்கம் பகுதியில் பழங்குடி, பூம்பூம் மாட்டுகாரர்கள் வசிக்கும் குடிசைப் பகுதிக்குச் சென்ற வேட்பாளரிடம், அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

அதற்கு வேட்பாளர் சிவக்குமார், “உங்களின் குறைகள் விரைவில் சரிசெய்யப்படும் மூன்றரை லட்சம் ரூபாயில் உங்களுக்கு அரசு வீடு கட்டித் தரப்படும். குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்படும்” என்று வாக்குறுதி அளித்தார். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி தரும் எடப்பாடி ஆட்சியை மீண்டும் தொடர தனக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்கிங் சென்ற ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details