தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளத்தில் குளிக்கச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு! - எட்டாம் வகுப்பு மாணவி நீரில் மூழ்கி பலி

விழுப்புரம்: உளுந்தூர்ப்பேட்டை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

girl death drowned in river

By

Published : Oct 5, 2019, 12:03 AM IST

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில் பாளையப்பட்டு தெருவைச் சேர்ந்தவர் மேரி.

இவர் அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மதியம் உளுந்தூர்ப்பேட்டையில் உள்ள கைலாசநாதர் கோயில் குளத்தில் சக மாணவிகளுடன் குளித்துக்கொண்டிருக்கும்போது நிலைதடுமாறி குளத்தின் மையப்பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார்.

இதையடுத்து அருகிலிருந்த பெண்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதித்தபோது மாணவி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதைக்கேட்ட பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதனர்.

தகவலறிந்த உளுந்தூர்ப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: #1YearOfCultClassic96 - மாற்றங்கள் வினா, மாற்றங்களே விடை

ABOUT THE AUTHOR

...view details