உளுந்தூர்பேட்டை தாலுகா வேலூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி மணிகண்டன். இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் சந்திரன் மற்றும் நடராஜன் ஆகியோரும் வசித்து வருகினறன்ர்.
மின் கசிவால் தீ விபத்து- அடுத்தடுத்து மூன்று கூரை வீடுகள் சேதம் - மின் கசிவு
உளுந்தூர்பேட்டை அருகே மின் கசிவால் அடுத்தடுத்து மூன்று கூரை வீடுகள் எரிந்து சாம்பலாகின.
மின் கசிவால் தீ விபத்து
இந்நிலையில், நேற்று மணிகண்டன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மணிகண்டனின் கூரை வீட்டில் திடீரென தீப்பற்றி மளமளவென்று எரிந்தது. இந்தத் தீயை அக்கம் பக்கத்தினர் அணைக்க முயற்சித்த நிலையில், தீ அருகாமையிலிருந்த வீடுகளுக்கும் பரவியது.
இது குறித்து, திருநாவலூர் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.