தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிறந்து 15 நாள்களே ஆன பெண் குழந்தை ஆற்றில் புதைப்பு! - தந்தையின் கொடூர செயல் - திருக்கோவிலூர் அருகே பெண் குழந்தையை ஆற்றில் புதைத்த தந்தை

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே பிறந்து 15 நாள்களே ஆன பெண் குழந்தையை ஆற்றில் புதைத்த தந்தையை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தையின் சடலம்

By

Published : Nov 5, 2019, 11:46 AM IST

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன் (25), இவரது மனைவி சவுந்தர்யா (19) இவர்களுக்கு திருமணமாகி 15 மாதங்கள் ஆன நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

பெண் குழந்தை பிறந்துள்ளதைக் கேட்டு மனமுடைந்து வரதராஜன் அங்கிருந்து வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர், அங்கிருந்த உறவினர்கள் மருத்துவமனையிலிருந்த சவுந்தர்யாவை வீட்டிற்கு அழைத்து வந்தனர். குழந்தை பிறந்த மூன்றாவது நாள், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வரதராஜன் தனது குழந்தையை அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றிற்கு எடுத்துச் சென்று புதைக்க முயன்றுள்ளார்.

ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தையின் சடலம்

அப்போது அருகில் இருந்தவர்கள் பார்த்து குழந்தையை மீட்டு, மீண்டும் வீட்டிற்கு கொண்டுவந்துள்ளனர். கணவரின் நடத்தையால் பயந்துபோன சவுந்தர்யா தனது தாய் வீட்டில் குழந்தையை வளர்த்துவந்துள்ளார்.

பின்னர், சவுந்தர்யாவிடம் நாடகமாடிய வரதராஜன், நாம் ஒன்றாக வாழலாம் எனக் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த குழந்தையை அருகிலிருந்த தென்பெண்ணை ஆற்றிற்கு கொண்டுசென்று புதைத்துள்ளார்.

வீட்டில் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சவுந்தர்யா, தமது உறவினரிடம் இது குறித்து கூறியுள்ளார். பின்னர், வரதராஜன் மீது சந்தேகமடைந்த அவர்கள் தென்பெண்ணையாறு பகுதிக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு சில இடங்களில் பள்ளம் தோண்டியிருந்தது தெரியவந்துள்ளது.

அங்கு தோண்டி பார்த்ததில் குழந்தையின் மீது துணியைச் சுற்றி புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வரதராஜனை விசாரணை செய்ததில் அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த திருக்கோவிலூர் காவல் துறையினர் வரதராஜனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க : தண்ணீர் கேனில் தவறி விழுந்த மூன்று வயதுக் குழந்தை உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details