விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் நானிலம் காப்போம் எனும் அமைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்த மாணவர்கள் அமைப்பு இன்று அவர்கள் பயின்ற அரகண்டநல்லூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பலா, கொய்யா, வேப்பமரம் உள்ளிட்ட 1000 மரக்கன்றுகளை வழங்கினார்கள்.
மரம் வளர்த்தால் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் - மாவட்ட கல்வி அலுவலர்!
விழுப்புரம்: படித்த முன்னாள் மாணவர்களால் வழங்கப்பட்ட மரக்கன்றுகளை வளர்த்தால் பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்தார்.
Tree Planting with students
இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்டம் கல்வி அலுவலர் கலந்து கொண்டு, பள்ளியில் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி விதைப்பந்துகளை வீசினார். வழங்கப்பட்ட மரங்களை பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் நல்ல முறையில் வளர்த்தால் கூடுதலாக இரண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும், என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்தார். மேலும், மாவட்ட கல்வி அலுவலர் மாணவர்களுடன் சேர்ந்து 300க்கும் மேற்ப்பட்ட விதைப்பந்துகளை பள்ளிக்கு அருகில் இருந்த ஏரியில் வீசினார்.