தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெருக்கெடுக்கும் வெள்ளம்: எல்லீஸ் சத்திரம் தடுப்பணை வெடிவைத்து தகர்ப்பு - அணை

விழுப்புரம் அருகே உள்ள 72 ஆண்டுகள் பழமையான எல்லீஸ் சத்திரம் தடுப்பணை மையப்பகுதியானது நேற்று (செப். 2) வெடிவைத்து தகர்க்கப்பட்டது.

எல்லீஸ் சத்திரம் அணை வெடிவைத்து தகர்ப்பு
எல்லீஸ் சத்திரம் அணை வெடிவைத்து தகர்ப்பு

By

Published : Sep 3, 2022, 10:21 PM IST

விழுப்புரம்: ஏனாதிமங்கலத்தில் உள்ள பழமையான எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டின் மையப்பகுதியானது வெடிவைத்து தகர்க்கப்பட்டது. சாத்தனூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியதால் தென்பெண்ணை ஆற்றில் அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால் விழுப்புரம் மாவட்டம் முக்கிய நீர் ஆதாரமான தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு கனமழையால் சேதமான 1950 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட எல்லீஸ் தடுப்பணை அதாவது கப்பூர் ஏனாதிமங்கலம் இடையே உள்ள அணையில் கரையோரம் மண் அரிப்பு ஏற்பட்டது.

எல்லீஸ் சத்திரம் அணை வெடிவைத்து தகர்ப்பு

இதனையடுத்து அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகன் உள்ளிட்டோரின் நேரடி பார்வையில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் 150 லாரிகளை கொண்டு பாறை கற்கள் கரையோரமாக கொட்டி மண் அரிப்பை தடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அதிகளவு தண்ணீர் வந்தால் பாதிப்பு ஏற்படும் என்று கருதி அணையின் மையப்பகுதியில் வெடி வைத்து தகர்க்கப்பட்டு தண்ணீர் செல்ல வழி செய்யப்பட்டது. இதனிடையே, மழைக்காலம் முடிந்த பின்னர் 70 கோடி ரூபாய் மதிப்பில் இந்த தடுப்பணை சீரமைத்து கட்டப்பட்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குடைக்குள் மழை போல், பேருந்துக்குள் மழை; அவதிப்பட்ட பொதுமக்கள்

ABOUT THE AUTHOR

...view details