விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதல் கடலூர் வரை உள்ள 1,794 சதுர கிலோமீட்டரில்ஹைட்ரோகார்பன்அமைய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த திட்டத்தை ரத்து செய்திடவும், காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஜனநாயக முறையில் போராடிய பொதுமக்கள், விவசாய அமைப்பின் நிர்வாகிகள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் விழுப்புரத்தில் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாராயணசாமிக்கு இருக்கும் தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை - Edappadi Palanisamy
விழுப்புரம்: ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு இருக்கும் துணிச்சல், தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு இல்லை என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் த.இந்திரஜித் குற்றம்சாட்டியுள்ளார்.
இதில் கலந்துக் கொண்ட சங்கத்தின் மாநில துணை செயலாளர் த.இந்திரஜித் கூறுகையில், "டெல்டா பகுதிகளை சுடுகாடாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கிறோம். இந்தத் திட்டத்தால் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் வரும். புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெளிவாக அறிவித்துவிட்டார்.
ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த தெளிவான முடிவை அறிவிக்கவில்லை. நாராயணசாமிக்கு இருக்கும் துணிச்சல், எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஆதரவா? இல்லையா? என்பதை பழனிசாமி தெளிவுப்படுத்த வேண்டும். சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் கூட இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் மிகப்பெரிய அளவில் நீரியியல் சேதாரம் ஏற்படும்" என்றார்.