விழுப்புரம்: விழுப்புரத்தில் இன்று அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஆளுநரை நேற்று சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு உத்தேச புகார்ப் பட்டியலைக் கொடுத்துள்ளார்.
இது ஒன்றும் புதிது அல்ல. அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுபோன்ற புகாரை திமுகவினர் தெரிவித்துவருகின்றனர். எவ்வித ஆதாரமும் இல்லாமல் மக்களிடம் அதிமுகவுக்கு அவப்பெயர் உருவாக்குவதற்காக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர்.
குறிப்பாக, முதலமைச்சர் மீது விதியை மீறி நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கியதாக புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, டெண்டர் எடுத்து பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடராத நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக வழக்கு தொடரப்படுவதாக குறிப்பிட்டு அம்மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.