இதுதொடர்பாக விழுப்புரம் மத்திய மாவட்ட கழக திமுக செயலாளர் நா.புகழேந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “விழுப்புரம் மத்திய மாவட்டக் திமுக செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நாளை (13.10.2020) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் விழுப்புரம் திமுக அலுவலக அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் ம.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான க.பொன்முடி ஆலோசனைகளை வழங்குகிறார்.