தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் சாராய ஊறல் அழிப்பு: குற்றவாளிக்கு வலைவீச்சு - அரகண்டநல்லூர் மலைப்புதரில் சாராய ஊறல் அழிப்பு

விழுப்புரம்: அரகண்டநல்லூர் அருகே மலைப்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல்களைக் காவலர்கள் கண்டுபிடித்து அழித்துள்ளனர்.

alcohol
alcohol

By

Published : Apr 19, 2020, 12:23 PM IST

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கல்லாந்தல் கிராம மலைப்பகுதியில் சாராய ஊறல்கள் மறைத்துவைக்கப்பட்டிருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து கண்காணிப்பார் ஜெயக்குமாரின் உத்தரவின்பேரில் மதுவிலக்கு சிறப்புப் பிரிவு ஆய்வாளர் ரேணுகா தேவி, காவல் உதவிஆய்வாளர் வீரசேகரன் தலைமையிலான காவல் துறையினர் இன்று அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர்.

மறைத்துவைக்கப்பட்டிருந்த சாராய ஊறல்

அப்போது அரசுப் பள்ளிக்குப் பின்புறம் இருந்த மலைப்பகுதி புதர் ஒன்றில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பேரல்களில் 400 லிட்டர் சாராயம் மறைத்துவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவற்றைப் பறிமுதல்செய்து அழித்த காவலர்கள், தலைமறைவாக இருக்கும் குற்றவாளி அய்யனார் என்பவரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:மதுபான குடோனை உடைத்து பாட்டில் திருடிய பாய்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details