விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாக துருகம் திம்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் அருண் குமார். இவர் கடந்த 5ஆம் தேதியன்று காய்ச்சல் காரணமாக தியாக துருகத்தில் உள்ள ஆரம்ப சுகாதரா நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு பொது வார்டில் சிகிச்சை! - டெங்கு காய்ச்சலால்
விழுப்புரம்: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவனுக்கு போதுமான சிகிச்சை அளிக்காமல் பொது வார்டிலேயே அனுமதிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த ஒருவாரமாக காய்ச்சல் குணமாகாததால், மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அருண் குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பதாக தெரிவித்தனர்.
பின்னர், மாணவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டதில், அருண் குமார் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுள்ளது தெரிய வந்தது. இந்நிலையில், அரசு மருத்துவமனையில் உள்ள கொசு வலை பொருந்திய வார்டில் வைத்து சிகிச்சை அளிக்காமல், அவரை பொது வார்டில் சக நோயாளிகளிடத்தில் அலட்சியமாக வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். போதுமான சிகிச்சை அளிக்காமால், பொது வார்டில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.