விழுப்புரம்: புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள குடியிருப்புகளில், இரவு நேரங்களில் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் சுற்றித்திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இரவுநேரங்களில் வீடுகளில் கொள்ளை அடிக்கத் திட்டம் போட்டு சுற்றுச் சுவர்களை தாண்டிக் குதிக்கும் திருடர்களால் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இரவு நேரங்களில் சுற்றித்திரியும் திருடர்கள் கூட்டம் இது தொடர்பாக பலமுறை சிசிடிவி காட்சிகளை காவல்துறையிடம் அளித்தும், நேரடியாக புகார் அளித்தும் இதுவரை கொள்ளையர்களைப் பிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபடவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே உடனடியாக மாவட்ட காவல்துறை தலையிட்டு கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த 5 கி.மீ தொலைவுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்